TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினம் - மே 18

May 21 , 2023 460 days 183 0
  • 1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மேரிலாந்தில் உள்ள மோர்கன் மாகாண பல்கலைக் கழகத்தில் HIV தடுப்பு மருந்து குறித்து உரை நிகழ்த்தினார்.
  • அதிபரின் அந்த உரைக்கு மதிப்பளிக்கும் விதமாக, மே 18 ஆம் தேதியானது உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினமாகக் கொண்டாடப்பட்டது.
  • முதல் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு மருந்துச் சோதனையானது 1997 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • இந்தச் சோதனைக்கு RV144 என்று பெயரிடப்பட்டது.
  • இரண்டு தடுப்பு மருந்துகளின் ஒரு கலவையான, HIV தொற்றிற்கு எதிரான முதல் தடுப்பு மருந்துச் சோதனை,  HIV நோய்த் தொற்றின் அபாயத்தை 31% குறைத்தது.
  • ஒரு வருடம் கழித்து 1998 ஆம் ஆண்டில் இந்த நாள் முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.
  • HIV தொற்றினால் இதுவரை 40.1 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
  • உலக சுகாதார அமைப்பின் பல்வேறு தரவுகளின் படி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 38.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்