இதுவரை 40.4 மில்லியன் [32.9 முதல் 51.3 மில்லியன்] உயிர்களைப் பலி வாங்கியுள்ள HIV ஒரு உலகளாவியப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் 39.0 மில்லியன் [33.1 முதல் 45.7 மில்லியன்] மக்கள் HIV பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (25.6 மில்லியன்) உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டில், 6,30,000 [4,80,00–8,80,000] பேர் HIV தொடர்பான நோய்களால் உயிர் இழந்தனர்.
அதே காலகட்டத்தில் சுமார் 1.3 மில்லியன் [1.0–1.7 மில்லியன்] மக்களுக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, தி குளோபல் பண்ட்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் திட்ட அமைப்பு ஆகிய அனைத்தும், 2030 ஆம் ஆண்டிற்குள் HIV தொற்றினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிலையான மேம்பாட்டு இலக்குடன் (இலக்கு 3.3) இணைக்கப்பட்டுள்ள வகையிலான உலகளாவிய HIV உத்திகளைக் கொண்டுள்ளன.
95:95:95 உத்தியின் படி, 2025 ஆம் ஆண்டிற்குள்
HIV (PLHIV) தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில் சுமார் 95% பேருக்கு நோய்க் கண்டறிதல் செயல்முறை என்று ஒன்று இருக்க வேண்டும்.
அவர்களில் 95% பேர் உயிர் காக்கும் HIV எதிர்ப்பு மருந்துச் சிகிச்சை (ART) பெற்று இருக்க வேண்டும் மற்றும்
HIV (PLHIV) தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில் சிகிச்சை பெறும் 95% பேர், ஒருவரின் ஆரோக்கிய நலனுக்காகவும், HIV பரவுவதைக் குறைப்பதற்காகவும் குறைவான அளவு வைரஸ் பாதிப்பு நிலையை அடைந்திருக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டில், இந்தச் சதவீதங்கள் முறையே 86(%) [73–>98%], 89(%) 75–>98%] மற்றும் 93(%) [79–>98%] ஆக இருந்தன.