TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 01

December 4 , 2018 2125 days 494 0
  • 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 அன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக எய்ட்ஸ் தினத்தின் 30-வது ஆண்டின் நினைவை இந்த ஆண்டு (2018) குறிக்கிறது.
  • எச்.ஐ.வியானது சர்வதேச பொது சுகாதார பிரச்சனை என்ற வகையில் அதனைக் குறித்து ஒரு புரிதல், கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது, “உங்களுடைய நிலையை அறிந்து கொள்ளுதல்” என்பதாகும்.
  • 1987 ஆம் ஆண்டில் டிசம்பர் 01 ஆம் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக உலக சுகாதார அமைப்பானது (WHO- World Health Organization) தேர்ந்தெடுத்தது.
  • இது அதிகாரப்பூர்வமாக உள்ள 8 சர்வதேச பொது சுகாதாரப் பிரச்சாரங்களில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பினால் குறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்