TNPSC Thervupettagam

உலக எரிசக்தி துறை வேலைவாய்ப்பு 2023

November 24 , 2023 238 days 210 0
  • சர்வதேச எரிசக்தி முகமை ஆனது, 2வது உலக எரிசக்தி துறை வேலைவாய்ப்பு (WEE 2023) அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த உலகளாவிய எரிசக்தி துறை வேலைவாய்ப்பு ஆனது சுமார் 67 மில்லியனை எட்டியது.
  • பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய காலக் கட்டத்தில் இருந்த எண்ணிக்கையை விட இது சுமார் 3.4 மில்லியன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • தோராயமாக 4 மில்லியன் வேலைவாய்ப்புகளுடன் சூரிய சக்தி ஒளி மின்னழுத்தக் கலன் துறையானது எரிசக்தித் துறைகளில் மிகப்பெரிய வேலையளிப்பு துறையாக உள்ளது.
  • 2019-22 ஆகிய காலக் கட்டத்தில், சீனாவில் தூய எரிசக்தித் துறையின் வேலை வாய்ப்புகளில் மிகப்பெரிய அதிகரிப்பும், புதைபடிவ எரிபொருள் வேலைவாய்ப்பில் குறைவும் பதிவாகியுள்ளது.
  • 2019-22 ஆகிய காலக் கட்டத்தில் இந்தியாவில் நான்காவது அதிகபட்ச புதிய தூய எரிசக்தி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • உலகளவிலான எரிசக்திப் பணியாளர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியங்களைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்