எறும்புத் திண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தனித்துவமான உயிரினங்களை அழிவிலிருந்துப் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3வது சனிக்கிழமையன்று உலக எறும்புத் திண்ணி தினமானது அனுசரிக்கப்பட இருக்கின்றது.
9வது உலக எறும்புத் திண்ணி தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று அனுசரிக்கப் பட்டது.
மத்தியப் பிரதேச வனத்துறையும் வனவிலங்குப் பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து முதன்முறையாக இந்த இனத்தின் சுற்றுச்சூழலை அறிந்து கொள்வதற்காகவும் பயனுள்ள பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவதற்காகவும் ஒரு இந்திய எறும்புத் திண்ணியை (மனிஸ் கிராசிகுடாட்டா) வானலை அடையாளத்துடன் இணைத்துள்ளது.
எறும்புத் திண்ணிகள் "செதில் எறும்புத் திண்ணிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. இது பல் இல்லாத ஒரு விலங்கு இனமாகும். உலகில் மிக அதிக அளவில் கடத்தப்படும் வனவிலங்கு இனங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.
இந்தியா 2 வகையான எறும்புத் திண்ணிகளுக்கு வாழிடமாகத் திகழ்கின்றது. சீன எறும்புத் திண்ணிகள் (மனிஸ் பென்டாடாக்டைலா) வடகிழக்கு இந்தியாவிலும் இந்திய எறும்புத் திண்ணிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் (இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான்) பரவிக் காணப்படுகின்றன.
இந்த 2 இனங்கள் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் அட்டவணை Iன் பகுதி 1ன் கீழ் மற்றும் CITESன் பட்டியல் Iன் கீழ் (வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் - Convention on International Trade in Endangered Species) பட்டியலிடப்பட்டுப் பாதுகாக்கப் படுகின்றன.