உலக எறும்புத் திண்ணி தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுவதோடு, இந்த ஆண்டு இந்தத் தினம் பிப்ரவரி 18 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினமானது எறும்புத் திண்ணிகளின் முக்கியத்துவத்தினைக் கொண்டாடுவது, அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளில் எறும்புத் திண்ணி கைப்பற்றப்பட்டு உலகளவில் சட்ட விரோதமாக விற்கப்படுவது போன்றவற்றிற்கு எதிரானப் போராட்டத்தில் சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஈடுபடச் செய்வதை உறுதி செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவற்றின் எண்ணிக்கை குறைய செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் அவற்றில் உள்ள மருத்துவக் குணத்தின் காரணமாக கடத்தப்படுவதேயாகும்.
எறும்புத் திண்ணிகளின் செதில்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
இந்தியாவில், ஒடிசாவில் தான் எறும்புத் திண்ணிகள் அதிக அளவில் கடத்தப் படுகின்றன.
இதில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது.
எறும்புத் திண்ணிகள் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.