எலும்புப்புரை மற்றும் வளர்சிதை மாற்ற எலும்பு நோய்களின் சிகிச்சை, நோய் கண்டறிதல், தடுப்பு முறைகள் போன்றவற்றைப் பற்றி உலகம் முழுவதும் விழிப்புணர்வை உண்டாக்க ஆண்டுதோறும் அக்டோபர் 20 ஆம் தேதி உலக எலும்புப்புரை தினம் கொண்டாடப் படுகிறது.
2017ஆம் ஆண்டிற்கான எலும்புப்புரை தினத்தின் கருத்துரு “உங்கள் எலும்புகளை நேசியுங்கள்” உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்தின் தேசிய எலும்புப் புரை கழகத்தால் 1996 ஆம் ஆண்டு உலக எலும்புப் புரை தினம் துவங்கப்பட்டது. ஐரோப்பிய ஆணையம் இதற்கு ஆதரவு அளித்துவருகின்றது. 1997 லிருந்து சர்வதேச எலும்புப்புரை அறக்கட்டளையால் இந்த விழிப்புணர்வு நாள் நடத்தப்பட்டுவருகிறது.