உலக எலும்புப் புரை தினமானது (WOD - World Osteoporosis Day) ஆண்டுதோறும் அக்டோபர் 20 அன்று எலும்புப் புரை மற்றும் எளிதில் ஏற்படக்கூடிய எலும்புமுறிவு குறித்து உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளானது எலும்புப் புரை நோய் தடுப்பு, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
அக்டோபர் 20, 1996 அன்று தொடங்கப்பட்ட இந்த நாளானது 1997 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எலும்புப் புரை அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில், உலக சுகாதார நிறுவனமானது உலக எலும்புப் புரை தினத்தின் இணை ஏற்பாட்டாளராக செயல்பட்டது.
எலும்புப் புரை என்பது எலும்புகளை பலவீனமாகவும் எளிதில் நொறுங்கக் கூடியதாகவும் மாற்றக்கூடிய ஒரு நோயாகும், இது எலும்புகள் உடையும் ஆபத்தை அதிகரிக்கிறது.