TNPSC Thervupettagam

உலக எலும்புப் புரை நோய் தினம் - அக்டோபர் 20

October 25 , 2022 670 days 222 0
  • எலும்புப் புரை நோய் மற்றும் வளர்சிதை மாற்றம் சார்ந்த எலும்பு நோய்க்கான தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • எலும்புப் புரை நோயினால் ஏற்படும் எலும்பு முறிவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் இந்தியர்களைப் பாதிக்கின்றன.
  • எலும்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஐக்கியப் பேரரசின் தேசிய எலும்புப் புரை நோய் சமூக அமைப்பானது 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியன்று இந்தத் தினத்தினை அறிமுகப்படுத்தியது.
  • எலும்புப் புரை நோயானது மனித உடலில் உள்ள எலும்புகளைப் பலவீனமாகவும், மிக எளிதாக உடையக் கூடியதாகவும் ஆக்குகிறது.
  • இதனால் அவை  திடீர் அசைவு, சிறிய வீழ்ச்சி, தும்மல் அல்லது கட்டி போன்ற காரணிகளினால் கூட எளிதில் உடைந்து போகும் தன்மையுள்ளதாக மாறும்.
  • 2022 ஆம் ஆண்டின் உலக எலும்புப் புரை நோய் தினத்தின் கருத்துரு, 'எலும்பு ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல்' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்