எழுத்து வடிவங்கள் மற்றும் உணர்வு வெளிப்படுத்திகளைப் (எமோஜிகளுக்கான) பயன்படுத்துவதற்கான எண்ணிம தரநிலைகளை வெளியிடும் ஒருங்குறியக் கூட்டமைப்பில் உள்ள மூன்று அரசு உறுப்பினர்களில் தமிழ்நாடு மாநில அரசும் ஒன்று ஆகும்.
ஆனால் தமிழக மாநில அரசானது உண்மையில் இத்தரநிலையினைப் பயன்படுத்தச் செய்வதிலிருந்து பெரும்பாலும் பின்தங்கியுள்ளது.
இத்தரநிலையினைப் பயன்படுத்துவதற்காக வேண்டி இந்தக் கூட்டமைப்பிற்கான உறுப்பினர் காலமான 16 வருட காலப் பகுதியில் 200,000 டாலர் அளவு தவணைத் தொகையினை மாநில அரசு செலவிட்டுள்ளது.
இக்கூட்டமைப்பில் தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழகமானது (TVA) தமிழக அரசின் பிரதிநிதி உறுப்பினராக உள்ளது.
பத்திரிக்கைத்துறை வெளியீடுகள், அரசு வெளியிடும் ஆணைகள் மற்றும் அரசிதழ் சார்ந்த அறிவிப்புகள் ஆகியவற்றில் பொதுவாக ஒருங்குறியத் தரத்துடன் பொருந்தாத தனிப்பயன் சார்ந்த தமிழ் எழுத்துருக்களேப் பயன்படுத்தபடுகின்றன.
இது அரசாங்க ஆவணங்களுக்கான அணுகல் மற்றும் அந்த ஆவணங்களை இயங் கலையில் (ஆன்லைனில்) கண்டறிவதிலும் பெரும் சிரமத்தினை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு அரசானது, ஒருங்குறியக் கூட்டமைப்பில் ஆதரவளிக்கும் உறுப்பினராக செயல்படுகிறது.
இந்தச் சலுகையானது, ஒருங்குறியத் தொழில்நுட்பக்குழுவினால் முன்வைக்கப்படும் முன்மொழிதல் மீது வாக்களிப்பதற்கு ஒருபாதி பங்கு வாக்கினை அளிப்பதற்கு மாநில அரசிற்கு வழி வகை செய்கிறது, ஆனால் அதில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வாக்களிக்கவில்லை.
தமிழ்நாடு தவிர, தற்போது இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில், வங்காளதேசம் மற்றும் ஓமன் அரசாங்கங்கள் மட்டுமே உறுப்பினர் அந்தஸ்திற்கான தொகையினைச் செலுத்துகின்றன.