செப்டம்பர் 16, 2009 அன்று, வியன்னா உடன்படிக்கை மற்றும் மாண்ட்ரீயல் நெறிமுறை ஆகியவை ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட முதல் ஒப்பந்தங்களாக மாறின.
ஓசோன் (O3) என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்ட ஒரு வினை புரியக் கூடிய வாயு ஆகும்.
இது இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ பூமியின் உயர் வளிமண்டலத்தில் (ஸ்ட்ரேடோஸ்பியர்) காணப்படும்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு “Montreal Protocol: Advancing Climate Actions” என்பதாகும்.
மாண்ட்ரீயல் நெறிமுறை செப்டம்பர் 16, 1987 அன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது ஓசோனைச் சிதைக்கும் பொருட்கள் (ODS) என குறிப்பிடப்படுகின்ற மனிதனால் உருவாக்கப் பட்ட இரசாயனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுகளை ஒழுங்குபடுத்தும் பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தம் ஆகும்.
இந்த ஓசோனைச் சிதைக்கும் பொருட்களால் படையடுக்கு மண்டல ஓசோன் படலம் சேதமடைகிறது.