உலகளாவிய கடன் (குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களின் கடன்கள் உட்பட) 2024 ஆம் ஆண்டில் 315 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகமாகும்.
உலகில் சுமார் 8.1 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இந்தக் கடனை ஒவ்வொருவருக்குமென பிரித்தால், உலகில் உள்ள ஒவ்வொருவரும் சுமார் 39,000 டாலர் கடன்பட்டவராகக் கூடும்.
மொத்த உலகளாவிய கடனில், வீட்டுக் கடன் 59.1 டிரில்லியன் டாலராக உள்ளது; வணிக கடன் 164.5 டிரில்லியன் டாலர்; மற்றும் அரசுக் கடன் (அரசாங்கங்களின் கடன்) 91.4 டிரில்லியன் டாலர் ஆகும்.
இந்தியாவின் பொதுக் கடன் 2023 ஆம் ஆண்டில், 2.9 டிரில்லியன் டாலரினை எட்டியுள்ள நிலையில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82.7% ஆகும்.