2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இந்த நாளை அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
கடல் புற்கள் ஆனது உலகின் பல பகுதிகளில் உள்ள ஆழமற்ற நீரில் காணப்படும் கடல் வாழ் பூக்கும் தாவரங்கள் ஆகும்.
அவை ஆயிரக்கணக்கான மீன்கள், கடல் குதிரைகள், ஆமைகளுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்குகின்றன என்பதோடு, அவை உலகின் மிகப்பெரிய மீன் வளங்களுக்கான ஆதார அமைப்பாகவும் உள்ளன.
அவை உலகின் கடல்சார் கரிமத்தில் 18 சதவீதம் வரை சேமித்து வைக்கக் கூடியவை என்பதால் பருவநிலை மாற்ற தாக்கங்களைச் சமாளிக்க ஒரு சக்தி வாய்ந்த இயற்கை சார்ந்த தீர்வாக அமையும்.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "வளமான கடல் புல், வளமான கிரகம்" என்பதாகும்.