கடல் பசுக்களானது கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் வெள்ளரிகள் மற்றும் இதர இனங்கள் போன்ற அருகிவரும் கடல்சார் உயிரினமாகும்.
இது இந்தியாவில் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் பட்டியல் I-ன் கீழ் பாதுகாக்கப் படுகின்றது.
2013 ஆம் ஆண்டில் இந்திய வனவிலங்கு ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா, அந்தமான் நிக்கோபர் தீவு, மற்றும் குஜராத்தின் கட்ச் வளைகுடா ஆகியவற்றில் ஏறத்தாழ 250 கடல் பசுக்கள் உள்ளன.
ஒடிசாவின் சிலிக்கா ஏரியில் உள்ள கடல் புற்கள் கடல் பசுக்களுக்கான ஒரு மிகச்சிறந்த வாழிடமாகும்.
எனினும் தற்பொழுது சிலிக்கா ஏரியில் கடல் பசுக்கள் இல்லை.