இந்த நாள் ஆனது கணினி சார்ந்தக் கல்வியறிவை ஊக்குவிக்கிறது மற்றும் கணினிப் பயன்பாட்டை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதையும் ஊக்குவிக்கிறது.
இந்த நாள் ஆனது தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (N.I.I.T.) தொடங்கப் பட்டது.
இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கணினி சார்ந்த கல்வியறிவினை அளிக்கச் செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் எண்ணிம ரீதியிலான பிளவைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIIT) ஆனது 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் இந்தியப் பன்னாட்டு நிறுவனமாகும்.
இந்த நாள் ஆனது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப் பட்டது.