2007 ஆம் ஆண்டு முதலாக நவம்பர் 8 ஆம் தேதியில் உலக கதிரியக்க வரைவியல் தினம் அனுசரிக்கப் படுகின்றது. இந்நாள் ராண்ட்ஜென் எக்ஸ்-கதிர்வீச்சைக் கண்டுபிடித்த தேதியைக் குறிக்கிறது.
உண்மையில், சர்வதேசக் கதிரியக்கவியல் தினமானது உலக கதிரியக்க வரைவியல் தினத்தைத் தொடர்ந்து அனுசரிக்கப் படுகிறது.
1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ராண்ட்ஜென் செய்த எக்ஸ்-கதிர்வீச்சின் கண்டுபிடிப்பைக் குறிக்கும் வகையில் கதிரியக்க வரைவியல் தொடர்பான ஒரு தினம் ஆண்டுதோறும் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம் 2011 ஆம் ஆண்டில் தீர்மானித்தது.
ஐரோப்பிய கதிரியக்கவியல் சங்கம் மற்றும் வட அமெரிக்க கதிரியக்கவியல் சங்கம் & கதிரியக்கவியல் அமெரிக்கக் கல்லூரி ஆகியவை நவம்பர் 8 ஆம் தேதியில் சர்வதேச கதிரியக்க வரைவியல் தினத்தை அனுசரிக்க முடிவு செய்தன. இது முதல் முறையாக 2012 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.