சுகாதார அமைப்பில் கதிர்ப்படப் பதிவாளர்களின் முக்கியப் பங்கு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1895 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று, ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர் ஆன வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென் ஊடு-கதிர்வீச்சுகளைக் கண்டுபிடித்தார்.
கதிரியக்கவியல் என்பது மனித உடலில் உள்ள திசுக்கள், உறுப்புகள், எலும்புகள் மற்றும் நாளங்களின் படங்களை வழங்குவதற்கு கதிர்வீச்சைப் பயன்படுத்தும் அறிவியல் ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “நோயாளியின் பாதுகாப்பைக் கொண்டாடுதல்” என்பதாகும்.