TNPSC Thervupettagam

உலக கரிம வரவு செலவு அறிக்கை 2022

November 19 , 2022 610 days 286 0
  • மனித நடவடிக்கைகளால் உமிழப்படும் கரிமத்தைக் கணக்கிடச் செய்யும் ஒரு அறிவியலாளர்கள் குழுவான உலக கரிமத் திட்டத்தால் இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கை வளிமண்டலத்தில் கரியமில வாயு குறைந்ததற்கான தடயம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது.
  • புவி உடனடியாக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளது.
  • 2022ம் ஆண்டில் வளிமண்டலத்தில் செலுத்தப்படும் உலகளாவியக் கரிம உமிழ்வுகளின் அளவானது 40.6 பில்லியன் டன்கள் கரியமில வாயு என்ற அளவினை எட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தக் கணிப்பானது, 2019 ஆம் ஆண்டில் மொத்த வருடாந்திர அளவில் மிக அதிக அளவில் உமிழப்பட்ட 40.9 பில்லியன் டன்கள் கரியமில வாயு என்ற அளவிற்கு மிக அருகாமையில் உள்ளது.
  • கணிக்கப்பட்ட உமிழ்வில், சீனா (0.9 சதவிகிதம்), ஐரோப்பிய ஒன்றியம் (0.8 சதவிகிதம்) ஆகியவற்றில் குறைந்தாலும், அமெரிக்கா (1.5 சதவிகிதம்), இந்தியா (6 சதவிகிதம்) மற்றும் எஞ்சியிருக்கும் உலகின் பிற பகுதிகளில் (1.7 சதவிகிதம்) அதிகரிக்கும்.
  • 2022ம் ஆண்டில் இந்தியாவில் பெரும்பாலும் நிலக்கரி  உமிழ்வில் ஏற்படும் ஒரு ஐந்து சதவிகித அதிகரிப்பால், 6 சதவிகித அளவிற்கு அதிக அளவிலான உமிழ்வு ஏற்படும்.
  • 2021 ஆம் ஆண்டில், உலகளாவியக் கரிம உமிழ்வுகளில் சீனா (31 சதவிகிதம்), அமெரிக்கா (14 சதவிகிதம்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (8 சதவிகிதம்) ஆகியன பெரும்பான்மையான உமிழ்வு நாடுகளாகும்.
  • இந்தியா உலக கரிம உமிழ்வில் 7 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
  • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022ம் ஆண்டில் இந்தியாவானது உலகில் கரிம உமிழ்வில் மிக அதிக அளவிலான அதிகரிப்பைச் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப் படுகின்றது.
  • கரிம உமிழ்வில் இரண்டாவது பெரிய அதிகரிப்பினை அமெரிக்கா பதிவு செய்ய உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கின்றது.
  • மொத்த உமிழ்வு அளவில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்திலும், தனிநபர் உமிழ்வில் இந்தியா உலகில் மிகவும் குறைவானது என்றும் தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்