இத்தினமானது எண்ணற்ற கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தகவலறிந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான ஒரு வாய்ப்பாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் கருதுரு "The Power of Options" என்பதாகும்.
கர்ப்பம் அடைவதைத் தடுப்பதற்காக கருத்தடை அல்லது பிறப்புக் கட்டுப்பாடு முறை பயன்படுத்தப்படுகிறது.
ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், T வடிவ தாமிரக் கம்பி பொருத்துதல் போன்ற கருப்பையக கருத்தடை சாதனங்கள் மற்றும் ஊசி மூலம் உட்செலுத்தக் கூடிய கருத்தடை மருந்துகள் ஆகியவை பிரபலமான கருத்தடை முறைகளில் சிலவாகும்.