கருத்தரித்தலில் பெண்களின் தன்னதிகாரம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய, பெண்கள் மற்றும் தம்பதிகள் விரும்பும் கருத்தடை சாதன அணுகல்களை உறுதிசெய்தல் மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தலே இத்தினத்தின் அனுசரிப்பு நோக்கமாகும்.
பெண்களை அவர்கள் எப்போது, எத்தனை குழந்தைகள் மற்றும் கருத்தரிப்பு தேவையா என அனுமதிப்பது உலக சுகாதார நல இலக்குகளுக்கான முன்னேற்றத்தை உறுதி செய்யும்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலை:
சமீபத்திய தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின்படி, (National Family Health Survey) தமிழகத்தில் அனைத்து வித கருத்தடை சாதன பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் 8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, 5.5 சதவீதத்திலிருந்த பெண்களுக்கான கருத்தடை விகிதம்4% ஆக குறைந்துள்ளது.
4% சதவீதத்திலிருந்த ஆண்களுக்கான கருத்தடை விகிதம்
0% ஆக குறைந்துள்ளது.
2005-06ல்4% என்ற அளவிலிருந்த அனைத்துவித குடும்பக் கட்டுப்பாட்டு முறையின் உபயோகிப்பு 2015-16ல் 53.2% ஆக குறைந்துள்ளது. (Use of any Family Planning method)
18 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு வருடத்திற்கு 3 முறை உட்செலுத்தத்தக்க கருத்தடை சாதனங்களை இலவசமாக அளிக்கும் ‘அந்தாரா திட்டத்தை’ தமிழக அரசு அண்மையில் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கருவுறுதல் தன்மையை நிரந்தரமாக இழக்காமல் கருவுறுதலை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.