கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் உள்ள கருவியலாளர்கள் செய்த அற்புதமானப் பணியை இத்தினம் அங்கீகரிக்கிறது.
இது இனப்பெருக்க மருத்துவத் துறையில், குறிப்பாக செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) துறையில் அவர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கிறது.
செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) மூலம் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் ப்ரௌனின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதியானது உலகச் செயற்கை முறை கருத்தரித்தல் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
லூயிஸ் 1978 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஐக்கியப் பேரரசின் ஓல்ட்ஹாம் நகரில் பிறந்தார்.
அன்றிலிருந்து இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் IVF மூலம் பிறந்து உள்ளனர்.