இது கலைஞர்களின் பங்களிப்பை நன்கு கௌரவித்து, நம் வாழ்வில் கலையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் மிகப் பெரிய ஓவியரான லியோனார்டோ டா வின்சி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
இந்த நாள் குறித்து, 2011 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற 17வது பொதுச் சபையில் சர்வதேச கலைச் சங்கத்தினால் (IAA) முன்மொழியப்பட்டது.
முதலாவது உலக கலை தினம் ஆனது 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
கலை மற்றும் கலைஞர்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக 1954 ஆம் ஆண்டு பாரீசு நகரில் உள்ள யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் சர்வதேச கலைச் சங்கம் நிறுவப்பட்டது.