ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் (World Hepatitis Day-WHD) அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
63-வது உலக சுகாதாரச் சபையானது ஜூலை 28 ஆம் தேதியை WHD ஆக அறிவித்துள்ளது.
கல்லீரல் அழற்சி நோய் தினம் என்ற கருத்துருவானது டாக்டர் ப்ளம்பெர்க் என்பவரால் ஒடிசாவின் கட்டாக்கில் உருவாகியது.
கல்லீரல் அழற்சி B வைரஸைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான டாக்டர் பரூச் ப்ளம்பெர்க் என்பவரின் பிறந்த தினத்தின் நினைவாக ஜூலை 28 என்ற தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவர் இந்த வைரஸிற்கான மருந்தையும் பரிசோதனையையும் கண்டுபிடித்தார்.
இந்தத் தினமானது தொற்றுநோய்க் குழுவான கல்லீரல் அழற்சி நோய் A,B, C, D மற்றும் E ஆகியவை குறித்தும் தொற்றுநோயைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “கல்லீரல் அழற்சி நோயை ஒழிப்பதில் முதலீடு செய்” எனபதாகும்.
2019 ஆம் ஆண்டின் உலக கல்லீரல் அழற்சி நோய் தினத்தை நடத்தும் நாடு பாகிஸ்தான் ஆகும்.