கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது மற்றும் ஆரோக்கியமான கல்லீரலை எவ்வாறு பேணுவது என்பது குறித்து மக்களுக்குக் கற்பிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, 1990 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், புதிய கல்லீரல் புற்றுநோய்ப் பாதிப்புகளானது 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கல்லீரல் சார்ந்த கோளாறுகள் என்பவை இறப்புக்கான பொதுவான காரணங்களில் 10வது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘விழிப்புணர்வுடன் இருத்தல், வழக்கமான கல்லீரல் பரிசோதனை மேற்கொள்தல், கொழுப்பு மிக்க கல்லீரல் நிலை யாரை வேண்டுமானாலும் பாதிக்கக் கூடியது’ என்பதாகும்.
கல்லீரல் நமது உடலின் இரண்டாவது மிக முக்கியமான உறுப்பாகும்.
இது வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்புச் சக்தி, கழிவகற்றம் மற்றும் உறிஞ்சப்பட்ட ஊட்டச் சத்துக்களின் சேமிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு உதவுகிறது.