சர்வதேச சுகாதார பிரச்சனைளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதற்காக அலுவல்பூர்வ ஐ.நா. சர்வதேச அனுசரிப்பு தினமான உலக கழிப்பறை தினம் நவம்பர் 19 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
2001 ஆம் ஆண்டில் உலக கழிப்பறை அமைப்பால் உலக கழிப்பறை தினம் தொடங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையானது உலக கழிப்பறை தினத்தை அலுவல்பூர்வ ஐ.நா. தினமாக அறிவித்தது.
ஐ.நா. - நீர் ஆணையமானது உலக கழிப்பறை தினத்தை அனுசரிக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனமாகும். இந்நிறுவனம் உலக கழிப்பறை தினத்திற்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பராமரிக்கிறது. மேலும் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்திற்கான சிறப்புக் கருத்துருவைத் தேர்ந்தெடுக்கிறது.
2018 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துருவானது “இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள்” என்பதாகும்.
2018 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான முழக்கமானது “இயற்கை அழைக்கும்போது, நமக்கு கழிப்பறை தேவைப்படுகிறது” என்பதாகும்.
2016 ஆம் ஆண்டு முதல் ஒட்டுமொத்த வருடாந்திரக் கருத்துருவானது உலக கழிப்பறை தினம் மற்றும் உலக நீர் தினம் (மார்ச் 22) ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஐ.நா. நீடித்த வளர்ச்சி இலக்கு 6 ஆனது 2030 ஆம் ஆண்டில் சுகாதார மேலாண்மை மற்றும் நீர் தேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.