இந்த நாள் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஓர் அவசர சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல் எனப்படும் 6வது நிலையான மேம்பாட்டு இலக்கின் ஒரு பகுதியாக மிகப் பாதுகாப்பான மற்றும் அணுகக் கூடிய கழிவறை வசதிகளின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Toilets - A Place for Peace’ என்பதாகும்.