TNPSC Thervupettagam

உலக கவசப் பாதுகாப்புத் திட்டம்

November 19 , 2022 610 days 280 0
  • எகிப்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 27வது உறுப்பினர்களின் மாநாட்டில், ஜி7 தலைமையிலான உலக கவசப் பாதுகாப்புத் திட்டமானது வெளியிடப்பட்டது.
  • இது பருவநிலைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதியளிக்கச் செய்திடும் ஒரு நிதியளிப்பு முறையாகும்.
  • இது ‘இழப்பு மற்றும் சேதம்’ என்ற முறையை மாற்றுவதற்குப் பதிலாக அதன் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட எண்ணுகின்றது.
  • ஜி7 ‘உலக கவசப் பாதுகாப்பு’ முன்னெடுப்பிடமிருந்து நிதியுதவி பெறும் முதல் பெறுநர்களில் பாகிஸ்தான் இருக்கும்.
  • ஜி7 குழுமம் மற்றும் பருவநிலை ரீதியில் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் ஜி20 குழுமம் ஆகியன இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகும்.
  • பாதிக்கப்படக்கூடிய பருவநிலை மன்றத்தின் பாதிக்கப்படக்கூடிய இருபது (வி20) என்ற குழுமத்தின் நிதியமைச்சர் குழுவானது பருவநிலைக்கு முறையாக பாதிக்கப் படக் கூடிய பொருளாதாரங்களுக்காக ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்