இந்தத் தினமானது, 1999 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற 30வது பொது மாநாட்டில் யுனெஸ்கோ அமைப்பினால் முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது கவிஞர்களைக் கெளரவிப்பதற்கும், வாய்வழி கவிதை வாசிப்புகளின் மரபுகளைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், கவிதை வாசிப்பு, எழுதுதல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குமான ஒரு வாய்ப்பாகும்.
இது "கவிதை வெளிப்பாடு மூலம் மொழியியல் பன்முகத்தன்மையை ஆதரிப்பது மற்றும் அழிந்து வரும் மொழிகளைப் புகழ் பெறச் செய்வதற்கான ஒரு வாய்ப்பினை அதிகரிப்பது" போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.