TNPSC Thervupettagam

உலக காசநோய் தினம் – மார்ச் 24

March 25 , 2021 1254 days 440 0
  • 1882 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று டாக்டர் இராபர்ட் காசநோய் உருவாகுவதற்கு ”டிபி பேசில்லஸ்” என்ற பாக்டீரியா தான் காரணம் என்று அறிவித்த நாளினை நினைவு கூரும் விதமாக இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் தினத்தின் கருத்துரு, “கடிகார முள் நகர்ந்துக் கொண்டிருக்கிறது” (The clock is ticking) என்பதாகும்.
  • காசநோய் என்பது இந்தியாவில் நிலவும் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
  • இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனப்படும் ஒரு பாக்டீரியத்தால் உருவாக்கப் படுகிறது.
  • இந்த பாக்டீரியா நுரையீரல், சிறுநீரகம், முதுகுத் தண்டு, மூளை ஆகியவற்றைப் பாதிக்கிறது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு தனது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயினை ஒழிப்பதாக அறிவித்துள்ளது.
  • நிக்சய் போஷன் யோஜனா என்பது காசநோய் நோயாளிகளுக்கு உணவு வாங்குவதற்கு மாதத்திற்கு ரூ.500 வழங்கும் இந்திய அரசின் ஒரு திட்டம் ஆகும்.
  • இது உலக சுகாதார அமைப்பினால் தொடங்கப்பட்ட பதினோரு உலகளாவிய பொது சுகாதார திட்டங்களில் ஒரு பிரச்சார தினமாகும்.
  • அவை,
    • உலக சுகாதார தினம்,
    • உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினம்,
    • உலக இரத்த தான தினம்,
    • உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம்,
    • உலக நோயெதிர்ப்பு வாரம்,
    • உலக மலேரியா தினம்,
    • உலக புகையிலை எதிர்ப்பு தினம்,
    • உலக நோயாளிப் பாதுகாப்பு தினம்,
    • உலக எய்ட்ஸ் தினம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்