இது நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்த நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை அதிகரிப்பது மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு ஆதரவைத் திரட்டுவது ஆகியவற்றினை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காசநோய் ஆனது முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கிறது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த முதன்மையான உயிர்க் கொல்லி நோய்களில் ஒன்றாகும்.
இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஆம்! நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர இயலும்” என்பதாகும்.