TNPSC Thervupettagam

உலக காடுகளின் நிலை அறிக்கை – 2022

May 6 , 2022 808 days 485 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் வெளியிடப்படும் ஒரு முதன்மையான அறிக்கையாகும்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
  • பூமியின் புவியியல் பரப்பில், 4.06 பில்லியன் ஹெக்டேர் (31%) பரப்பில் காடுகள் அமைந்துள்ளன.
  • காடுகளின் அழிப்பு காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் (1990 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையில்) உலகிலுள்ள மொத்தக் காடுகளில் சுமார் 10.34% (420 மில்லியன் ஹெக்டேர்) காடுகள் அழிந்துள்ளது.
  • 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு  இடையில் ஒவ்வோர் ஆண்டிலும் 10 மில்லியன் ஹெக்டேர் அளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன.
  • காடுகளின் மீதான மனித அழுத்தம் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த சில தசாப்தங்களில் புதிய விலங்குகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய்களுக்கான மிகப் பெரிய மையமாக இந்தியாவும் சீனாவும் உருவாகலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்