ஐக்கிய நாடுகளின் உலக கானுயிர் தினம் - 2020ன் கருப்பொருள், 'பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் பேணுதல்' என்பதாகும்.
2013 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது மார்ச் 3 ஆம் தேதியை ஐ.நா உலக கானுயிர் தினமாக அறிவித்தது.
இது 1973 ஆம் ஆண்டில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்து இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தத்தில் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) கையொப்பமிட்ட தினத்தைக் குறிக்கின்றது.