TNPSC Thervupettagam

உலக கிப்பன் குரங்கின வலையமைப்பு (GGN)

July 23 , 2023 495 days 287 0
  • சீனாவில் நடைபெற்ற கிப்பன் குரங்கு இனங்கள் குறித்த உலகளாவிய நிகழ்வில், இந்தியாவின் மனிதக் குரங்கு இனத்திற்கு வழங்கப்பட்ட வளங்காப்பு அந்தஸ்தானது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் அனைத்து மனிதக் குரங்கு இனங்களிலும் கிப்பன் வகை குரங்கு இனங்கள் மிகச்சிறியவை மற்றும் வேகமாக செயல்படக் கூடியவையாகும்.
  • இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே பிரத்யேகமாக காணப்படும் ஹூலாக் கிப்பன் இனமானது, பூமியில் உள்ள 20 வகையான கிப்பன் இனங்களில் ஒன்றாகும்.
  • ஹூலாக் கிப்பன் இனங்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது 12,000 ஆகும்.
  • அனைத்து 20 கிப்பன் இனங்களும் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.
  • 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிப்பன் தின நிகழ்வில் உலக கிப்பன் குரங்கின வலை அமைப்பு தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்