உலக குத்துச்சண்டை அமைப்பில் இணையும் புதிய உறுப்பினர்கள்
August 30 , 2023 451 days 269 0
உலக குத்துச்சண்டை என்பது குத்துச் சண்டை விளையாட்டை நடத்தச் செய்வதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரத்தை கோரும் ஒரு புதிய அமைப்பாகும்.
கனடா, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஹோண்டுராஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் தேசியக் கூட்டமைப்புகள் இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ளன.
இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை ஏற்கனவே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
முன்னதாக நிர்வாகம், நிதி மற்றும் விளையாட்டுச் சீர்திருத்தங்கள் சார்ந்த பல்வேறு விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ரஷ்யா தலைமையிலான சர்வதேசக் குத்துச் சண்டை சங்கத்தின் அங்கீகாரத்தினை சர்வதேச ஒலிம்பிக் குழு ரத்து செய்தது.