TNPSC Thervupettagam

உலக குறைப்பிரசவ சிசு தினம் - நவம்பர் 17

November 22 , 2022 642 days 251 0
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, குறைப்பிரசவ சிசு என்பது கர்ப்ப காலத்தின் 37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன்பு உயிருடன் பிறந்த குழந்தைகள் என வரையறுக்கப் படுகிறது.
  • இது மிகவும் முன்கூட்டிய (28 வாரங்களுக்கும் குறைவானது), மிகக் குறைப்பிரசவம் (28 முதல் 32 வாரங்கள்) மற்றும் சற்று முந்தையது முதல் மிக தாமதமான முன்கூட்டியே பிறந்த (32 முதல் 37 வாரங்கள்) பிற வகை குழந்தைகளையும் உள்ளடக்கியது.
  • குறைப் பிரசவம், அதாவது கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறப்பதே பச்சிளம் குழந்தைகள் அதிகம் இறப்பதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாகும்.
  • கங்காரு இனம் சார்ந்த தாய்ப் பராமரிப்பு என்பது குறைமாத அல்லது குறைப் பிரசவ குழந்தைகளுக்கான பராமரிப்பு முறையாகும்.
  • இது குறைப்பிரசவ குழந்தைகளுக்கான நேரடியாக உடல் ரீதியில் தொடர்பு கொள்ளச் செய்யும் ஒரு முறையாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'ஒரு பெற்றோரின் அரவணைப்பு: ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை. பிறந்த தருணத்திலிருந்து தோலுடன் தொடர்புகொள்ள செய்தல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்