இந்த நாள் உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் குறைப் பிரசவத்துடன் தொடர்பிலான பல சவால்கள் குறித்த விழிப்புணர்வையும். குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையைக் கொண்டாடவும் செய்கிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு குறைப் பிரசவம் என்பது ஒரு முக்கியக் காரணமாகும்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் (பத்தில் ஒன்று) குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன.
குறைப்பிரசவம் என்பது 37 வார கர்ப்பகாலத்திற்கு முன்னதாகவே குழந்தை பிறக்கும் நிகழ்வு ஆகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Small actions, BIG IMPACT: Immediate skin-to-skin care for every baby everywhere” என்பதாகும்.