உலக குளிர்காலச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025
March 19 , 2025 15 days 90 0
இத்தாலி நாட்டின் டூரின் என்ற நகரில் நடைபெற்ற உலக குளிர்காலச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் இந்தியா 12 பதக்கங்களைப் பெற்றது.
8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உட்பட இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 33 ஆகும்.
பனிச்சறுக்கு மற்றும் மலைச் சரிவு பனிச்சறுக்கு ஆகியப் போட்டிகளில் இந்தியா தலா 10 பதக்கங்களையும் பலகைப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஆறு பதக்கங்களையும் பெற்றது.
குறுகிய பாதை வேகச் சறுக்கு, நாடு கடந்த பனிச்சறுக்குப் போட்டி மற்றும் தரைப் பந்து ஆகியப் போட்டிகளில் முறையே நான்கு, இரண்டு மற்றும் ஒரு பதக்கங்களை இந்தியா வென்றது.