ஹங்கேரியின் புத்தாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
மாலிக் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த தனது போட்டியாளரான செனியா படாபோவிச் என்பவரை 5-0 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தி 73 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
உலக கேடட் மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் எனும் பெருமையை பிரியா மாலிக் பெற்றுள்ளார்.