தேசியத் தொழில்நுட்ப தினம் – மே 11
May 13 , 2020
1661 days
527
- ஒவ்வொரு ஆண்டும் இத்தினமானது இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை நினைவு கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
- இந்த ஆண்டின் கருப்பொருள், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதின் மீது கவனம் செலுத்துதல்” என்பதாகும்.
- 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று, இந்தியா தனது முதலாவது வெற்றிகரமான சக்தி – 1 என்ற அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது.
- இந்த ஏவுகணையானது இராஜஸ்தானில் உள்ள இந்திய ராணுவத்தின் பொக்ரான் சோதனைத் தளத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- இந்தச் சோதனையானது, “சக்தி நடவடிக்கை” (பொக்ரான் II) என்று அழைக்கப் படுகின்றது.
- இந்த வெற்றிகர சோதனைக்குப் பின்பு, பிரதமர் வாஜ்பாய் இந்தியாவை அணு ஆயுத நாடாக அறிவித்தார்.
- இது நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
- இது P5 எனப்படும் ஐநா நிரந்தர உறுப்பு நாடுகளுக்குப் பிறகு அணு ஆயுத மன்றத்தில் இணையும் 6வது நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது.
- மேலும் இது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT - Non- Proliferation of Nuclear Weapons Treaty) இணையாத முதலாவது நாடாகவும் இந்தியாவை மாற்றி உள்ளது.
- இதற்கு முன்பு இந்தியாவின் முதலாவது அணு ஆயுதச் சோதனை “சிரிக்கும் புத்தர்” (பொக்ரான் - 1) என்பதாகும்.
- இது 1974 ஆம் ஆண்டு மே மாதத்தில் பொக்ரானில் மேற்கொள்ளப்பட்டது.
- மே 11 ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது திரிசூல் ஏவுகணையைச் சோதனை செய்த நாளையும் குறிக்கின்றது.
- மேலும் இது “ஹன்சா – 3” என்ற முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தின் விமானப் பயணத்தையும் குறிக்கின்றது.
Post Views:
527