உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report) ஆனது பாரிஸின் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ்-ல் அமைந்துள்ள உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் (World Inequality Lab) வெளியிடப்படுகின்றது.
உலகில் நிலவும் சமத்துவமின்மையின் பரிமாணங்கள் மீதான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
இந்த அறிக்கையின் படி, 1980ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 27 சதவீத புது வருமான பெருக்கமானது ஒரு சதவீத பணக்காரர்களால் கைக்கொள்ளப்பட்டு உள்ளது.
அதே வேளையில் வெறும் 13 சதவீத வளர்ச்சி வருமானப் பெருக்கத்தை மட்டுமே உலகின் 50% ஏழைகள் அடைந்துள்ளனர்.
இந்த அறிக்கையில் இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையும் முன்னிலைப்படுத்தி காட்டப்பட்டு உள்ளது.
2014ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த 56% வருமான உற்பத்தியை 10 சதவீத பெரும் பணக்காரர்கள் அடைந்துள்ளனர்.
1980ஆம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறந்த சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடு நீக்கமே (deregulation) கணிசமான சமத்துவமின்மை அதிகரிப்பின் காரணம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.