வறுமை, சமூக புறக்கணிப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகளை கையாளுவதற்கென மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பிப்ரவரி 20 ஆம் தேதி உலக சமூக நீதிநாள் (World Social Justice Day) கொண்டாடப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான சமூக நீதி நாளின் கருத்துரு Þ “முன்னேற்றத்திலுள்ள தொழிலாளர்கள்; சமூக நீதிக்கான தேடல்” (Workers on the Move: The Quest for Social Justice)
நவம்பர் 26, 2007 அன்று ஐ.நா. பொது அவை தன்னுடைய 63-வது பொது அவை கூடுகையிலிருந்து பிப்ரவரி 20 ஆம் தேதியானது ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது.