TNPSC Thervupettagam

உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கை 2024-26

October 12 , 2024 42 days 102 0
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதோவொரு வகையான சமூகப் பாதுகாப்பு நலத் திட்டத்தின் கீழ் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
  • “உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கை 2024–26: பருவநிலை நடவடிக்கை மற்றும் ஒரு முறையான மாற்றத்திற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு” என்ற ஒரு தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடபட்டுள்ளது.
  • உலக மக்கள்தொகையில் 52.4 சதவீதம் பேர் தற்போது குறைந்தபட்சம் ஒரு சமூகப் பாதுகாப்புப் பலனையாவது பெற்றுள்ளனர் என்ற நிலையில் இது 2015 ஆம் ஆண்டில் 42.8 சதவீதமாக இருந்தது.
  • பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய நிலையில் உள்ள 20 நாடுகளில், 91.3 சதவீத மக்கள் (364 மில்லியன்) எந்த விதமான சமூகப் பாதுகாப்பையும் கொண்டு இருக்க வில்லை.
  • உலகளவில், 54.6 சதவீத ஆண்களுடன் ஒப்பிடச் செய்கையில், 50.1 சதவீதப் பெண்கள் குறைந்த பட்சம் ஒரு சமூகப் பாதுகாப்புப் பலனையாவதுப் பெற்றுள்ளனர்.
  • 0 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 28.2 சதவீதம் பேர் மட்டுமே குழந்தை அல்லது குடும்பப் பணப் பலன்களை (நிதி சார் பலன்கள்) பெறுகின்றனர்.
  • இதனால் 1.4 பில்லியன் குழந்தைகள் சமூகப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.
  • அதிக வருமானம் கொண்ட நாடுகள் சமூகப் பாதுகாப்பிற்காக (சுகாதாரம் தவிர்த்து) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக சும்மார் 16.2 சதவீதத் தொகையினை செலவிடுகின்றன.
  • ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் வெறும் 0.8 சதவீதத்தையே சமூகப் பாதுகாப்பிற்காகச் செலவிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்