வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமூக விலக்கல், பாலினச் சமத்துவமின்மை, மனித உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையானது, பொதுச் சபையின் 63வது அமர்வில் இருந்து இந்த நாள் அனுசரிக்கப் படுவதாக அறிவித்தது.
2008 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதியன்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது ஒரு நியாயமான உலகமயமாக்கலுக்கான சமூக நீதிக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "இடைவெளிகளைக் குறைத்தல், கூட்டணிகளை உருவாக்குதல்" என்பதாகும்.