TNPSC Thervupettagam

உலக சர்க்கரை உற்பத்தி – அதிக பதிவு

July 16 , 2018 2325 days 731 0
  • UN அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், 2017-18ல் உலக சர்க்கரை உற்பத்தி அதிகளவாக 187.6 மில்லியன் டன்களை எட்டியும் நுகர்வினைவிட அதிக அளவினையும் கொண்டிருக்கும் என்று கணித்துக் கூறியுள்ளது.
  • எதிர்பார்க்கப்பட்ட உபரியானது வரலாற்றிலேயே மிகவும் அதிகமானதாக இருக்கும்.
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food And Agricultural Organisation) படி, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உற்பத்தி அதிகமானதே இதற்கு காரணமாகும்.
  • பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் சர்க்கரை உற்பத்தியின் குறைவினை இந்தியா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் விரிவாக்கம் ஈடு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • சர்க்கரை நுகர்வின் உயர்வு குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.
  • ஏற்றுமதியானது உலகின் பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளரான பிரேசிலில் குறையும் என்றும் ஆனால் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளரான தாய்லாந்தில் அதிகரிக்கும் என்றும் எதிர்நோக்கப்படுகிறது. இது ஏராளமான சர்க்கரை கையிருப்பின் தூண்டுதல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்