TNPSC Thervupettagam

உலக சாகாஸ் நோய் தினம் - ஏப்ரல் 14

April 16 , 2023 592 days 196 0
  • ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை, குறிப்பாக ஏழை மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மக்களைப் பாதிக்கும் இந்த அதிகம் அறியப்படாத நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 72வது உலக சுகாதாரச் சபையானது இந்நாளை இந்த நோய்க்கான தினமாக அர்ப்பணித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "சாகாஸ் நோயை ஆரம்பச் சுகாதார நலனுடன் ஒருங்கிணைப்பதற்கான நேரம்" என்பதாகும்.
  • சாகாஸ் நோயானது, அமெரிக்கன் டிரிபனோசோமியாசிஸ் என்றும் அழைக்கப் படச் செய்கிறது.
  • 1909 ஆம் ஆண்டில், பிரேசிலிய நாட்டினைச் சேர்ந்தக் குழந்தைக்கு இந்த நோய் ஏற்பட்டு உள்ளதை முதன்முதலில் கண்டறிந்த மருத்துவர் கார்லோஸ் சாகாஸ் என்பவரின் பெயரால் இந்த நோய்க்குப் பெயரிடப்பட்டது.
  • ஒரு தொற்றக் கூடிய ஒட்டுண்ணி நோயான இது 6-7 மில்லியன் மக்களைப் பாதித்து உள்ளதோடு, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 12,000 உயிர்களைப் பறித்தும் உள்ளது.
  • இது டிரிபனோசோமா க்ரூஸி என்ற ஒட்டுண்ணி புரோட்டோசோவினால் ஏற்படுகிறது.
  • சாகாஸ் நோய்க்கான தடுப்பூசிகள் தற்போது வரையில் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்