இத்தினமானது அக்டோபர் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் இத்தினம் அக்டோபர் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
சிக்கனப் படுத்தும் பழக்கத்தை நன்முறையில் ஊக்குவிப்பதற்காகவும், பணத்தையும் செல்வத்தையும் சிறந்த முறையில் நிர்வகிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
முதலாவது உலக சிக்கன தினமானது, 1924 ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலன் நகரில் கொண்டாடப் பட்டது.
இந்த நிகழ்வில் உலக சேமிப்பு மற்றும் சில்லறை வங்கி நிறுவனம் தொடங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, சேமிப்பு மூலம் "உங்கள் நாளைய தினத்தை வெல்லுங்கள்!" என்பதாகும்.