TNPSC Thervupettagam

உலக சிங்கங்கள் தினம் – ஆகஸ்ட் 10

August 12 , 2020 1507 days 575 0
  • இத்தினமானது சிங்கங்கள் குறித்தும்  சிங்கங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் மக்களுக்குக் கல்வியறிவு ஏற்படுத்துவதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆசியச் சிங்கங்களின் ஒரே இயற்கை வாழிடம் கிர் காடுகளாகும்.
  • இது 1965 ஆம் ஆண்டில் வனவிலங்குச் சரணாலயமாகவும் 1975 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாகவும் அறிவிக்கப் பட்டது.
  • இந்தியாவில் காணப்படும் ஆசியச் சிங்கமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • ஆசியச் சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டமானது 2018 ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்