இது காட்டுச் சிங்கங்களின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்புப் பற்றிய ஒரு பொது அறிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சிங்க தினம் ஆண்டு முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் பிக் கேட் ரெஸ்க்யூ என்ற அமைப்பு மூலம் நிறுவப்பட்டது.
ஆப்பிரிக்காவில் உள்ள காட்டுச் சிங்கங்களின் மொத்த எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் சுமார் 20,000 மற்றும் 25,000 இடைப்பட்டதாக இருக்கும்.
2015 ஆம் ஆண்டில், கிர் வனப் பகுதியில் 523 சிங்கங்கள் இருப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ளது, ஆனால் 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ஆசிய சிங்கம் அருகி வரும் ஒரு இனமாகவும், ஆப்பிரிக்கச் சிங்கம் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகவும் பட்டியலிடப்பட்டன.