நகர்ப்புற சுற்றுச்சூழலில் உள்ள வீட்டுக் குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவைகளினைப் பற்றியும், அவற்றிற்கு உள்ள அச்சுறுத்தல்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச்-20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் (World Sparrow Day - WSD) கொண்டாடப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டினுடைய Eco-Sys ஆக்சன் பவுண்டேஷன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடனானக் கூட்டிணைவோடு நேச்சர் ஃபார் எவர் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பால் (Nature Forever Society of India-NFSI) தொடங்கப்பட்ட ஓர் சர்வதேசத் தொடக்கமே உலக சிட்டுக்குருவி தினமாகும்.
குருவிகள் மற்றும் நகர்ப்புறத்தினுடைய பல்வகைத் தன்மையை பாதுகாக்க வேண்டியத் தேவையை முக்கியத்துவம் கொடுத்து அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கு ஓர் சர்வதேச மேடையாக இத்தினத்தைப் பயன்படுத்துவதே, உலகச் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கமாகும்.
2010-ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் முதல் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.
பறவைகளில் முக்கியமாக வீட்டுக்குருவிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு 2012ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசானது “குருவிகளின் எழுச்சி” (Rise of Sparrows) எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
குருவிகளின் பாதுகாப்பிற்காக முந்தைய டெல்லி அரசானது குருவிகளை “மாநிலப் பறவையாக” அறிவித்தது குறிப்பிடத்தக்கது.