உலக சிறுநீரக தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது.
நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு நமது சிறுநீரகங்கள் ஆற்றும் முக்கியப் பணி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் சிறுநீரக நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளின் பாதிப்பு நிலை மற்றும் தாக்கத்தைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சர்வதேச சிறுநீரகவியல் சமூகம் (ISN) மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளை கூட்டமைப்பு - உலக சிறுநீரகக் கூட்டணி (IFKF-WKA) ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.